காருக்குள் பெண் ஊழியர்களுக்கு பாலியல் வன்கொடுமை.. டைல்ஸ் கடை முதலாளிகள் கைது

இரண்டு பெண்களும் வேலை முடிந்து கடையை விட்டு செல்லும்போது அவர்களை தடுத்துள்ளனர்காரில் ஹிஜாபூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்
காருக்குள் பெண்  ஊழியர்களுக்கு பாலியல் வன்கொடுமை.. டைல்ஸ் கடை முதலாளிகள் கைது
Published on

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் டைல்ஸ் கடை உரிமையாளர்கள் இருவர் தங்களது கடையில் துப்புரவு  வேலை பார்த்து வந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பேட்டில் உள்ள டைல்ஸ் கடையில் துப்புரவு வேலை பார்த்து வந்த இரண்டு பெண்களும் நேற்று முன் தினம் வேலை முடிந்து கடையை விட்டு வெளியேறும்போதுஅவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மது ஊற்றி காரில் ஹிஜாபூர் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு காருக்குள் வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிந்த போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com