வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கத் தலைவர் புதிய கட்சி தொடங்குகிறார்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான குர்னம் சிங் சதூனி, நாளை புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளார்.
விவசாய சங்க தலைவர் குர்னம் சிங்
விவசாய சங்க தலைவர் குர்னம் சிங்
Published on

ராய்ப்பூர்:

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் ஒராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாபஸ் பெற்றன. 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான குர்னம் சிங் சதூனி புதிய அரசியல் கட்சி ஒன்றை நாளை சத்தீஸ்கரில் தொடங்க உள்ளார்.  இவர், மத்திய அரசிடம் வார்த்தை நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பில் இடம்பெற்றிருந்த ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com