ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து

நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டன.விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.
ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
Published on

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயிலின் பின்புறத்தில் உள்ள சிட்டிங் கம் லக்கேஜ் ரேக் (SLR) க்கு அருகில் அமைந்துள்ள ஜெனரல் சிட்டிங் (GS) பெட்டியின் சக்கரங்கள், இன்று (புதன்கிழமை) காலை 11:56 மணிக்கு ரயில் புறப்படும்போது விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்தபோது ரெயில் மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு தேவையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் அசாம் மாநிலத்தில் தடம் புரண்டன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com