மாணவர்களின் கோபத்தை பார்த்த ‘தீய சக்திகள்’ கூடுதல் நேரம் வேலை செய்ய தொடங்கிவிட்டன: ப்ரீத்தி ஜிந்தா

நமது ஜனநாயகத்தின் மீதும், சட்டம் ஒழுங்கு மற்றும் நமது அரசாங்கத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.
மாணவர்களின் கோபத்தை பார்த்த ‘தீய சக்திகள்’ கூடுதல் நேரம் வேலை செய்ய தொடங்கிவிட்டன: ப்ரீத்தி ஜிந்தா
Published on

காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான போராட்டங்களுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த இயக்கம் தேசவிரோத சக்திகளால் கைப்பற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் விரிவடைந்து வரும் சூழலில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக, நடிகையும் தொழிலபதிருமான ப்ரீத்தி ஜிந்தா எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கு ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு:

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது மாணவர்களுக்கு ஆதரவளிப்பதும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தில் நேர்ம்றையான தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்களை கோருவதும் முக்கியம் என்றாலும்,

மாணவர்களின் அமைதியான போராட்டங்கள், குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் போராட்டத்தின் தன்மையை மாற்றுவதற்கும் தேசவிரோத சக்திகளால் திசை திருப்பப்படாமல் இருப்பதும் மிகவும் முக்கியம்.

இணையத்தில் இவ்வளவு வெறுப்பையும் பிளவுகளையும் காணும்போது, நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தீய சக்திகள், நமது மாணவர்கள் உணரும் கோபத்தையும் விரக்தியையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காகக் கூடுதல் நேரம் வேலை செய்யத் தொடங்கிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கடின உழைப்பு, சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகியவற்றில் நான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன்.

அதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. நமது ஜனநாயகத்தின் மீதும் மற்றும் சட்டம் ஒழுங்கின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

எனவே, இரு தரப்பினரும் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட்டு, இந்தப் போராட்டம் மற்றும் உரையாடலில் இருந்து எந்தவொரு தீய சக்திகளையும் நோக்கங்களையும் களைவார்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

அதன் மூலம் நமது இளைஞர்களுக்கும் நமது ஜனநாயகத்திற்கும் எதிர்காலம் பிரகாசமாக அமையும்.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மேலும் மோசமடையாமல் இருக்க, நமது அரசு சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் ஒரு அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்கும் என்று நம்புகிறேன்.

தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் சோனம். இந்தப் போராட்டத்தைப் போலவே உங்கள் உடல்நிலையும் முக்கியமானது.

நீங்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்காலத்திற்காகவும் நமது இளைஞர்களுக்காகவும் போராடுகிறீர்கள்.

நமது கல்வி முறையை உயர்த்தி மேம்படுத்துவதற்கான இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் சோனமுக்கும் எனது மனமார்ந்த மற்றும் அசைக்க முடியாத ஆதரவு உண்டு.

உங்கள் அனைவருக்கும் மேலும் சக்தி கிடைக்கட்டும். ஜெய் ஹிந்த்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com