பதவி விலகிய தர்மேந்திர பிரதான் - பாஜக மூத்த தலைவர்கள் எக்ஸ் தளத்தில் உருக்கம்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் கிரண் ரிஜிஜு எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்தனர்.
Senior BJP leaders highlighting his education reforms
Published on

நீட் தேர்வு வினத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கடந்த காலங்களில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆற்றிய சேவைக்காக, அவருக்கு நன்றி தெரிவித்து பாஜக மூத்த தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதிவு:

இத்தனை ஆண்டுகளாக தேசத்தின் பரந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததாக கூறி பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து நிதின் நபின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சராக, இந்தியாவின் கல்வி சூழலை சீர்திருத்துவதிலும், வரலாற்று சிறப்புமிக்க தேசிய கல்வி கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும், மேலும் பல முன்னெடுப்புகளிலும் முக்கிய பங்காற்றினார்.

பரந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர் பதவி விலகும் முடிவு, பொது வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய மிக உயர்ந்த நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையை பிரதிபலிக்கிறது.

இந்த முடிவில் தர்மேந்திர பிரதானுக்கு, கட்சி உறுதுணையாக நிற்கிறது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கிரண் ரிஜிஜு எக்ஸ் தள பதிவு:

இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உண்மையான தலைமைத்துவம் என்பது பல ஆண்டுகளின் உழைப்பால் அளவிடப்படுகிறது.

தங்களின் பயணம், பொது வாழ்விலும் மாணவர் நலனிலும், நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு ஒரு சான்றாக திகழ்கிறது.

மத்திய அமைச்சரவையில் உங்களுடன் இணைந்து பணியாற்றியபோது, இந்தியாவின் கல்வி சூழலை வலுப்படுத்துவதிலும், நமது கோடிக்கணக்கான இளம் மாணவர்களை ஒவ்வொரு முடிவின் மையத்தில் வைப்பதிலும் உங்கள் அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன்.

இத்தகைய ஒரு முக்கிய துறையை வழி நடத்த அளவற்ற விடாமுயற்சி தேவைப்படுகிறது. அதை நீங்கள் தையரித்துடனும், தெளிவான தொலை நோக்கு பார்வையுடனும் ஏற்றுக்கொண்டீர்கள்.

உங்களின் அயராத சேவைக்கும், சீர்திருத்தங்களுக்கான உங்களின் அர்ப்பணிப்புக்கும், வலிமையான இந்தியாவை கட்டமைப்பதில் உங்கள் பங்களிப்புக்கும் நன்றி.

இதே உறுதியுடனும் நேர்மையுடனும் நீங்கள் தொடர்ந்து தேசத்திற்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com