ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
Published on

ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.43 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத்  தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக அதன் அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில்  முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அதன் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அந்நாட்டின் பல்வேறு பள்ளத்தாக்கு பகுதிகளில் இது உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com