மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை அள்ளச் செய்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் | Madhya Pradesh

வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது.
மதுபோதையில் மலம் கழித்து மாணவர்களை அள்ளச் செய்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் | Madhya Pradesh
Published on

மத்தியப் பிரதேச மாநில அரசு தொடக்கப் பள்ளியில் குடிபோதையில் தலைமையாசிரியர் பள்ளி வளாகத்தில் மலம் கழித்து அதனைப் பள்ளி மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

அரசுப் பள்ளி

மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் ஹர்டுவா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சமைலால் கோல் (50)

இவர் தொடர்ந்து பள்ளிக்கு மதுபோதையில் வந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக, அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாகக் புகார் தெரிவித்து வந்தனர்.

பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர் ராமாவதார் கோல் மற்றும் ஊர் பொதுமக்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

மது, குட்கா, மலம்

ஆய்வின் போது, ஆசிரியர் சமைலால் கோல் தினமும் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வருவதை அம்மாணவர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும், ஒருமுறை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்துவிட்டு, அதைத் தங்களை விட்டுச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

பஞ்சாயத்துத் தலைவர் பார்வையிட்ட போது மலம் அகற்றப்பட்டிருந்த போதிலும், வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது.

"ஆசிரியர் தினமும் கடுமையான போதையில் இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் தான் அவரைத் தினமும் காலையில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்கிறார்கள்" என்று பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை

கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையைத் தொடர்ந்து சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

பதில் பெறப்பட்ட பிறகு, அவர் மீது இடைநீக்கம் உள்ளிட்ட அடுத்தகட்டக் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com