மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார் தி.மு.க எம்.பி.கனிமொழி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேச்சு.பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க முன்வந்ததாக பிரதான் கூறியது தவறானது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார் தி.மு.க எம்.பி.கனிமொழி
Published on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது திமுக எம்.பி கனிமொழி உரிமை மீறில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேச்சு என புகார் அளித்துள்ளார்.

அதில், பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க முன்வந்ததாக பிரதான் கூறியது தவறானது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுளளது. தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சபாநாயகரிடம் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com