கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்- டெல்லியில் புதிய திட்டம் துவக்கம்

டெல்லியில் கட்டுமான தொழிலாளர்கள் பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள்
கட்டுமான தொழிலாளர்கள்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் பெண்களுக்கு பிங்க் டிக்கெட் எனப்படும் இலவச டிக்கெட் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கட்டுமான தொழிலாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக இணைய தளம் அல்லது கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் கட்டுமான தொழிலாளர்கள் இலவச பஸ் பாஸ்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் கட்டுமான தொழிலாளார்களின் பங்கு அளப்பரியது என்பதால் இத்திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com