

டெல்லியில் போலியாக கணக்கு தொடங்கி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்த வங்கி துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் சைலேந்திர குமார் என்பவரின் அரசாங்க அடையாள அட்டைகளைத் திருடி, மகாகால் எண்டர்பிரைசஸ் என்ற போலி நிறுவனத்தை மோசடி நபர்கள் தொடங்கியுள்ளனர்.
இதன்மூலம் சட்டவிரோத இணையவழி நிதி பறிமாற்றம் செய்து ரூ.67.92 கோடிக்கும் அதிகமான அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 159 இணையவழி மோசடி புகார்களை அடுத்து, டெல்லியில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் துணை மேலாளர் பபித்ரா குமார் பிஸ்வால் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விண்ணப்பத்தாரரை முறையாக சரிபார்க்காமலும், பரிதுரைக்கப்பட்ட KYC மற்றும் வாடிக்கையாளர் சரிபார்ப்பு ஆவணங்களை பூர்த்தி செய்யமலும் கணக்கு தொடங்கபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாரதிய நியாய சம்ஹிதா தொடர்புடைய விதிகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, வங்கி துணை மேலாளரிடம் இருந்த இரண்டு செல்போன்களை டெல்லி சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.