ஒரே மேடையில் விவாதம் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அழைப்பு

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதத்தில் பங்கேற்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது.
ஒரே மேடையில் விவாதம் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அழைப்பு
Published on

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தோதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "பொதுமக்கள் என்ற முறையில், நாங்கள் இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே கேட்டோம், ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் எதையும் கேட்கவில்லை. ஆகவே மக்கள் உண்மையை தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்கு இந்த விவாதம் தேவைப்படுகிறது.

ஆகவே முக்கிய தேர்தல் பிரச்சினைகள் குறித்த இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு மோடியையும் ராகுல் காந்தியையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதத்தில் பங்கேற்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது" என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விடுத்த அழைப்புக்கு ராகுல் காந்தி கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com