டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம்

உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்தது.
தூக்கில் தொங்கிய ஆண் சடலம்
தூக்கில் தொங்கிய ஆண் சடலம்
Published on

புது டெல்லி:

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் யமுனா விடுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாணவர்கள் நடந்து சென்றபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது அங்கு மரத்தில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இறந்தவர் 40 வயதுடைய ஆண் என்பது மட்டும் தெரியவந்தது. ஆனால் அவரது அடையாளம் தெரியப்படவில்லை.

மேலும் உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து யாராவது அவரை கொலை செய்து தூங்கில் தொங்கவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com