ஜாவத் புயல் வலுவிழந்தது... ஒடிசா, ஆந்திராவுக்கு சற்று நிம்மதி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஜாவத் புயல், நாளை மேலும் வலுவிழந்து ஒடிசாவின் பூரி அருகே கரைகடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ள பகுதி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ள பகுதி
Published on

புதுடெல்லி:

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள புயல் இன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கியது. 

ஜாவத் புயல் நாளை வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை தாக்குவதுடன், ஒடிசா மாநிலம் பூரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேசமயம், புயல் கரையை நெருங்கும்முன்பு வலுவிழந்து விடும் என்று கணித்திருந்தது. 

அதன்படி, ஜாவத் புயல் இன்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 180 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டிருந்தது. தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்கிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஜாவத் புயல், நாளை காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின்னர் ஒடிசாவின் பூரி அருகே கரைகடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தீவிர புயலாக தாக்கினால் ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது புயல் வலுவிழந்ததால், இரண்டு மாநில அரசுகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com