ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடல்.. தந்தையர் தினத்தில் நடத்த கொடூரம் - நடந்தது என்ன?

தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடல்.. தந்தையர் தினத்தில் நடத்த கொடூரம் - நடந்தது என்ன?
Published on

தந்தையர் தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கஞ்வாலா பகுதியில் ரத்தத்தில் தோய்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடந்திய விசாரணையில் அப்பெண்ணின் தந்தையே கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

அந்த பெண் தனது காதலனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில் அவரது தந்தை தான் பார்த்த மாப்பிளையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கஞ்வாலா பகுதிக்கு தனது மகளை டாக்சியில் அழைத்து வந்த தந்தை கண்ணாடி அறுக்கும் உபகரணத்தை வைத்து மகளை அறுத்துக் கொன்றுள்ளார்.

மேலும், டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார். இறுதியில் உண்மை தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com