ஊருக்குள் உலா.. வாகனங்களுக்கு மத்தியில் வாக்கிங் சென்ற முதலை - வீடியோ வைரல்

சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஊருக்குள் உலா.. வாகனங்களுக்கு மத்தியில் வாக்கிங் சென்ற முதலை - வீடியோ வைரல்
Published on

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் கனமழை தொடர்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லன் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.

கனமழையை தொடர்ந்து, சாலையில் பெரிய முதலையை ஒன்று உர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் முதலை வருவதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். கனமழைக்கிடையில் முதலை ஒன்று சாலையில் சகஜமாக வருவதை பார்த்த நபர் ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் படம்பிடித்த வீடியோவில், சிப்லுன் சாலையில் பெரிய முதலை ஊர்ந்து செல்லும் காட்சி இடம்பெற்று இருந்தது. கனமழை காரணமாக சிவன் நதியில் இருந்து முதலை வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மூன்று முதலை இனங்களில் ஒன்றான குவளை முதலைகளுக்கு பெயர் பெற்றது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. ரத்னகிரி மாவட்டத்தில் நாளை (ஜூலை 2) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com