கெஜ்ரிவாலுக்கு வரும் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்

கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.வரும் 28-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது.
கெஜ்ரிவாலுக்கு வரும் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்
Published on

புதுடெல்லி:

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரிக்க 6 நாள் காவலுக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட் அனுமதி அளித்தது. இதன்மூலம் அவரிடம் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com