பள்ளி மாணவிக்கு 'கட்டாய முத்தம்' கொடுத்த கண்டக்டர்

பள்ளிக்கு சென்றதும் பஸ்சில் நடந்த சம்பவத்தை ஆசிரியர்களிடம் மாணவி தெரிவித்தார்.பள்ளி மாணவியிடம் அத்துமீறியது குறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.
பள்ளி மாணவிக்கு 'கட்டாய முத்தம்' கொடுத்த கண்டக்டர்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் பெரும்பில்லிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சஜன்(வயது37). தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றுகிறார். திருச்சூர்- கொடுங்கல்லூர் வழித் தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சில் கண்டக்டராக இருக்கிறார். நேற்று காலை வழக்கம்போல் சஜன் பணிக்கு சென்றார். அப்போது அவரது பஸ்சில் இரிஞ்சாலக்குடா பஸ்நிலையத்தில் இருந்து பள்ளி மாணவி ஒருவர் ஏறினார்.

அந்த மாணவியிடம் கண்டக்டர் சஜன் தவறாக நடந்துள்ளார். மேலும் மாணவிக்கு 'கட்டாய முத்தம்' கொடுத்துள்ளார். சக பயணிகள் மத்தியில் பஸ்சில் கண்டக்டர் திடீரென 'கட்டாய முத்தம்' கொடுத்ததால் மாணவி அதிர்ச்சியடைந்தார். பள்ளிக்கு சென்றதும் பஸ்சில் நடந்த சம்பவத்தை ஆசிரியர்களிடம் மாணவி தெரிவித்தார்.

இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறியிருக்கின்றனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் சகோதரர், தனது நண்பர்கள் சிலருடன் மாலையில் பஸ் நிலையத்துக்கு சென்றார். மாணவி காலையில் சென்ற தனியார் பஸ்சை தடுத்துநிறுத்தினர்.

மாணவியிடம் தவறாக நடந்த கண்டக்டர் சஜனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவியிடம் அத்துமீறியது குறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கண்டக்டர் சஜனை கைது செய்தனர். ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு கண்டக்டர் 'கட்டாய முத்தம்' கொடுத்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com