சித்தூர் அருகே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவரை மரத்தில் கட்டி வைத்து அடி உதை

சித்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
சித்தூர் அருகே 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவரை மரத்தில் கட்டி வைத்து அடி உதை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி.

இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 42 வயது தொழிலாளி ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

சிறுமி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com