கவிதை சொல்லி பிரதமரை கவர்ந்த குழந்தைகள்- வீடியோ வைரல்

கவிதை பாடிய குழந்தைகளை அருகே அழைத்து, கட்டி அணைத்த பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார்.பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்திக்க வந்துள்ளனர்.
கவிதை சொல்லி பிரதமரை கவர்ந்த குழந்தைகள்- வீடியோ வைரல்
Published on

டெல்லியில் பிரதமர் மோடியை அவர் அலுவலகத்தில் சந்தித்த இரு குழந்தைகள், பிரதமருக்காக இயற்றிய கவிதையை பாடி அவரின் மனதை கவர்ந்தனர். கவிதை பாடிய குழந்தைகளை அருகே அழைத்து, கட்டி அணைத்த பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். 

இந்த குழந்தைகள் அரியானா மாநில ஆளுநராக இருக்கும் பண்டாரு தத்தாத்ரேயாவின் பேத்திகள் ஆவர். பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்திக்க வந்துள்ளனர்.

அப்போது இந்த குழந்தைகள் பிரதமருக்கான இயற்றிய கவிதையை பாடினர். கவிதையை பாடிய குழந்தைகளை பிரதமர் மோடி கொஞ்சிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com