சண்டிகரில் மெடிக்கல் ஷாப்பில் துப்பாக்கிச்சூடு - காசாளர் பலி

13 முறை சுட்டுவிட்டு தப்பி ஓட்டம்.
Cashier shot dead
Published on

சண்டிகரின் செக்டர் 11-ல் உள்ள ஒரு பிரபல மருந்துக் கடையின் உள்ளே இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்கு பணிபுரிந்த காசாளரை கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், காசாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக்கில் வந்த மூவரில் இருவர் மெடிக்கல் ஷாப்பில் நுழைந்து பொதுமக்கள் முன்னிலையில் காசாளரை துப்பாக்கியால் சுட்டனர். 13 முறை சுட்டுவிட்டு வெளியில் காத்திருந்த பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், காவல்துறையின் விசாரணையில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த காசாளர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான்கி என்று அடையாளம் காணப்பட்டார்.

மருந்துக் கடையின் உரிமையாளர் ஏற்கனவே கொலை மிரட்டல் அழைப்புகளைப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இவர் மிக அருகில் இருந்து குறிவைக்கப்பட்டு சுடப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு நபர்களும் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com