

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.