சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த முறைகேட்டை அம்பலப்படுத்திய 18 வயது இளைஞரை சந்தித்து பாராட்டிய ராகுல்

இளைஞர்கள் தொடர்ந்து ரீல்ஸ் செய்துகொண்டும், பக்கோடா பொரித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்றே மோடிஜி விரும்புகிறார்.
சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த முறைகேட்டை அம்பலப்படுத்திய 18 வயது இளைஞரை சந்தித்து பாராட்டிய  ராகுல்
Published on

ஆன்லைன் விடைத்தாள் மதிப்பீட்டு (OSM) பணிக்கான டெண்டர், COEMPT என்ற ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கிடைக்கும் வகையில் சிபிஎஸ்இ விதிகளை முறைகேடாக மாற்றியதாக சார்தக் என்ற 18 வயது இளைஞர் தனது ஹேக்கிங் திறன் மூலம் ஆதரங்களை திரட்டி வெளியிட்டார்.

நிர்வாக குளறுபடிகளுக்கு பொறுப்பேற்ற சிபிஎஸ்இ, உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் இளைஞர் சார்தக்-ஐ நேரில் அழைத்து பேசி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்ட பதவில்,

"சார்தக்கிற்கு வயது 18தான். இருப்பினும், மன உறுதி, துணிச்சல் மற்றும் கொள்கைப் பிடிப்பு ஆகியவற்றில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல.

நாட்டின் முன்னணிCBSE மற்றும் COEMPT ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுச் சதியை அவர்கள் நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினர்.


ஊடக நிறுவனங்களாலும் புலனாய்வுப் பத்திரிகையாளர்களாலும் கூடச் செய்ய முடியாத ஒன்றை அவரும் அவரது நண்பர் நிசர்க்கும் சாதித்துக் காட்டினர்.

CBSE மற்றும் COEMPT ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுச் சதியை அவர்கள் நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினர்.

கேள்விகள் கேட்காமலும், கண்களைத் திறக்காமலும் நம் இளைஞர்கள் தொடர்ந்து ரீல்ஸ் செய்துகொண்டும், பக்கோடா பொரித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்றே மோடிஜி விரும்புகிறார்.

ஆனால், இந்த இளைஞர்கள் கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கான விடைகளையும் கண்டறிந்தனர்.

நாட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் CBIஐ விடவும் விரைவாகவும் கூர்மையாகவும் செயல்பட்டுத் தன் திறனை நிரூபித்துள்ளார்.

இளைஞர்களின் இந்த வெற்றி, அரசாங்கத்திற்கு ஒரு தோல்வியாகும்.

இதுதான் இந்தியாவின் உண்மையான இளைஞர் சக்தி, ஆர்வமும், விழிப்புணர்வும், தெளிவான புரிதலும் கொண்ட சக்தி.

நினைவில் கொள்ளுங்கள், நாட்டின் எதிர்காலம் ஒருபோதும் தவறான பாதையில் திசைதிருப்பப்படாது." என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com