தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: கே.ஆர்.எஸ். அணை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா

தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
BS Yediyurappa
பி.எஸ். எடியூரப்பா
Published on

காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு முறையாக திறந்து விடுவதில்லை. மழை அதிகமாக பொழியும் காலத்தில் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.

இந்த ஆண்டு எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை குறைவாகத்தான் பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காவிரி பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. தமிழகத்திறகு மாதந்தோறும் திறந்த விடக்கூடிய நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

தண்ணீர் இல்லாமல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு தண்ணீர் திறந்த விட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி வருகிறார்.

காவிரி மேலாண்மை ஆணையம்

இந்த நிலையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி விதம் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இதனால் கர்நாடக மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டி.கே. சிவக்குமார் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.

கர்நாடகாவில் போராட்டம்

இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை டி.கே. சிவக்குமார் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

எடியூரப்பா போராட்டம்

இந்த நிலையில் இன்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான எடியூரப்பா, ஆதரவார்களுடன் கே.ஆர்.எஸ். அணைப் பகுதிக்கு சென்றார். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். அணை அருகே சென்ற அவர், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநில பாஜக தலைவரான பி.ஒய். விஜயேந்திரா "டி.கே. சிவக்குமார் மந்திர சபை விரிவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். காவிரி தொடர்பாக சட்டப்பூர்வ வல்லுநர்களை சந்திக்க நேரமில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரும் கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com