சந்திரபாபு நாயுடு குறித்து அவதூறு வீடியோ- நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு

தெலுங்கு தேசம் கட்சியினர் ஸ்ரீ ரெட்டி மீது கடும் கோபம் அடைந்தனர்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமோகன் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சந்திரபாபு நாயுடு குறித்து அவதூறு வீடியோ- நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு
Published on

திருப்பதி:

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண், தகவல் தொழில்நுட்ப மந்திரி லோகேஷ், உள்துறை மந்திரி அனிதா மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் ஸ்ரீ ரெட்டி மீது கடும் கோபம் அடைந்தனர்.

கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகநாஜு என்பவர் அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3-வது நகர போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமோகன் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com