பானிபூரியில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி

சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. பானிபூரியில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பானிபூரியில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல்கள் - கர்நாடகாவில் அதிர்ச்சி
Published on

வட இந்தியாவில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருந்த பானிபூரி தற்போது இந்தியா முழுவதும் உள்ளவர்களும் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 260 பானிபூரி மாதிரிகளை சோதனை செய்த பின்னர் அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

18 பானிபூரி மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என்றும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்களுக்கு கலக்கப்படும் ரோடமின் பி கெமிக்கலை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com