26-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
26-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திருப்புனித்துறையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சிறுவன் மிஹிர் (வயது16). இவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 26-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புனித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com