பையில் திணிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு- கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்

சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பையில் திணிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு- கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்
Published on

புதுடெல்லி:

கிழக்கு டெல்லி சதாரா மாவட்டத்தில் உள்ள பார்ஷ் பஜார் போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த முகவரிக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு கிடந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அந்த பையில் ஒரு பெண்ணின் பிணம் திணிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெண்ணின் பெயர் ஷாமா (23) என்பது தெரிய வந்தது. அவர் நியூ சஞ்சய் அமர் காலனியை சேர்ந்தவர் ஆவார்.

தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த போது அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த பெண்ணை யாரோ கழுத்தை நெரித்து கொன்று பையில் அடைத்து வீட்டு அருகே போட்டு சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறிய போது, 'பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளோம். இதுவரை நடந்த விசாரணையில் சந்தேகமான நபரை பற்றி வலுவான தடயங்கள் கிடைத்துள்ளன. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com