இஸ்ரேல் தூதரகத்தை அலற விட்ட வெடி சத்தம்.. டெல்லியில் பரபரப்பு

சம்பவ இடத்தில் காவல் துறை விசாரணை. காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இஸ்ரேல் தூதரகத்தை அலற விட்ட வெடி சத்தம்.. டெல்லியில் பரபரப்பு
Published on

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் அதிபயங்கர சத்தம் கேட்டதாக டெல்லி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தொலைபேசியில் கிடைத்த தகவலை வைத்து சம்பவ இடத்திற்கு காவல் துறை விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது.

மேலும் தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். எனினும், அந்த பகுதியில் இருந்து அத்தகைய சத்தம் வந்ததற்கான ஆதாரம் எதுவும் காவல் துறைக்கு கிடைக்கவில்லை.

இன்று மாலை 5 மணி அளவில் தூதரகம் அருகில் குண்டு வெடிப்புக்கு இணையான அளவு அதிபயங்கரமான சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com