பெங்களூரில் இரட்டை கொலை: மகளை கொன்ற முன்னாள் காதலனை கொலை செய்த தாய்

சுரேஷ் என்பவர் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர்
பெங்களூரில் இரட்டை கொலை: மகளை கொன்ற முன்னாள் காதலனை கொலை செய்த தாய்
Published on

பெங்களூரில் கோரகுண்டேபாலயா பகுதியை சேர்ந்த 45 வயதான சுரேஷ் என்பவரும் ஜேபி நகரைச் சேர்ந்த 24 வயதான அனுஷாவும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது சுரேஷ் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி அனுஷாவுடன் பழகி வந்துள்ளார். ஆனால் சுரேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்தபிறகு அனுஷா அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெ.பி.நகர் அருகில் உள்ள சராக்கி பூங்காவுக்கு நேற்று மாலை 4:15 மணிக்கு அனுஷாவும் சுரேசும் சந்தித்து பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால், அனுஷாவை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.

அந்த சமயத்தில் அனுஷாவை பின்தொடர்ந்து வந்த அவரது தாயார் கீதா, சுரேஷை தடுத்து நிறுத்த ஓடியிருக்கிறார். அப்போது அங்கிருந்த செங்கல்லை எடுத்து சுரேஷின் தலையில் அவர் அடித்தார். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பிறகு தனது மகளை கீதா மருத்துவமனைக்கு அழைத்துவந்த போது, அங்கே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com