

அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் தனது பி.டெக் பட்டப்படிப்பை முடித்தார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அவர் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். 50-க்கும் மேற்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் எழுதியும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனது தந்தையிடம் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ள அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அப்பா... நான் ஒரு அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.