75 ஆண்டுகால சலுகை முடிவுக்கு வந்தது.. அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அசாம்

நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம். ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்.
75 ஆண்டுகால சலுகை முடிவுக்கு வந்தது.. அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அசாம்
Published on

அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்க ஊழியர்களும் வரும் ஜூலை மாதம் முதல் தங்கள் மின்சார கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் அவரது தலைமைச் செயலாளரும் தங்கள் குடியிருப்பு மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதம் 1-ந்தேதி செலுத்த தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுக்கு மின்கட்டணம் செலுத்தும் 75 ஆண்டு கால விஐபி கலாச்சார விதியை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.

அதற்கு முன்னுதாரணமாகி நானும், தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தத் தொடங்குவோம். ஜூலை 2024 முதல், அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள்" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com