குடிப்பழக்கத்தை நிறுத்த கணவர்களை வீட்டிற்குள் மது அருந்த சொல்லுங்கள் - பாஜக அமைச்சர் யோசனை

கணவர்களை வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள்.என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது
குடிப்பழக்கத்தை நிறுத்த கணவர்களை வீட்டிற்குள் மது அருந்த சொல்லுங்கள் - பாஜக அமைச்சர் யோசனை
Published on: 

மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள்.

மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com