மம்தாவுக்கு மற்றொரு அதிர்ச்சி: மேலும் ஒரு திரிணாமுல் எம்.பி பதவி விலகினார்

சுஷ்மிதா தேவ் 2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
sushmitha dev
Published on

சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மம்தா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 எம்.எல்.ஏ.க்கள் மேற்குவங்க சட்டசபையில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் ரிதப்ரதா பானர்ஜி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.

இதற்கிடையே, மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சுஷ்மிதா தேவ் விலகியுள்ளார்.

சுஷ்மிதா தேவ் 2021-ல் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். அதன்பின் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

சுஷ்மிதா தேவின் ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com