

மத்திய பிரதேச மாநிலம் பந்துர்னா மாவட்டத்தில் கார்காட் கம்தி கிராமத்தை சேர்ந்தவர் வச்சல பாய் துர்வே.
கர்ப்பமாக உள்ள இவர் கிராமத்தின் அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு வாங்கச் சென்றுள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட சத்துணவு பொட்டலத்தை வீட்டிற்குச் சென்று திறந்து பார்த்தபோது இறந்த பாம்பு குட்டி ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அங்கன்வாடிகள் மூலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட உணவுப் பொட்டலங்களை விநியோகித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.