7 அடி உயர இருக்கையில் அமர்ந்து டிராக்டர் ஓட்டிய விவசாயி

வீடியோ சுவாரஸ்யமானது, ஆனால் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. ஏன் இவ்வாறு இயக்க வேண்டும்? என ஆனந்த் மகிந்திரா கேள்வி எழுப்பி உள்ளார். பயனரின் பதிவில், ஒரு ஜே.சி.பி. ஆபரேட்டர் டிராக்டர் டிரைவராக மாறும் போது இவ்வாறு நடக்கும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
7 அடி உயர இருக்கையில் அமர்ந்து டிராக்டர் ஓட்டிய விவசாயி
Published on

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். இவர், வலைதளங்களில் டிரெண்டாகும் வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் இளைஞர்களின் வித்தியாசமான செயல்கள் பற்றிய பதிவுகளை தனது வலைதள பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில், தற்போது அவர் ஒரு வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பார்வையாளர்களுக்கு வேடிக்கையாக உள்ளது. அந்த வீடியோவில், ஒரு விவசாயி டிராக்டர் ஓட்டுகிறார். ஆனால் டிராக்டரின் இருக்கையில் அந்த நபர் ஒரு கருவியை மாட்டி சுமார் 7 அடி உயரத்தில் உயர்த்தப்பட்ட இருக்கையுடன் அமர்ந்து டிராக்டரை இயக்குவது போன்று காட்சி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மகிந்திரா, இந்த வீடியோ சுவாரஸ்யமானது, ஆனால் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. ஏன் இவ்வாறு இயக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது இந்த பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ஒருவேளை அவர் ஒரு வயலில் பயிர் உயரமாக உள்ள இடத்தில் இந்த டிராக்டரை பயன்படுத்தி இருக்கலாம். அந்த உயரமான மட்டத்தில் அமர்ந்திருப்பதால் அவர் வயலை தெளிவாக பார்க்க முடியும் என கூறி உள்ளார். மற்றொரு பயனரின் பதிவில், ஒரு ஜே.சி.பி. ஆபரேட்டர் டிராக்டர் டிரைவராக மாறும் போது இவ்வாறு நடக்கும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com