பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற ராணுவ அதிகாரி

நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.அந்தரங்க வீடியோவை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.
பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணிக்க முயன்ற ராணுவ அதிகாரி
Published on

மத்தியப் பிரதேசத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை திணித்து கொடுமை படுத்திய ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் AB சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அசாமில் பணியில் உள்ள சஞ்சய் யாதவ் என்ற ராணுவ அதிகாரி [நாயக்] தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வங்கி மேனஜராக பணியாற்றிவரும் கவுசல்யா என்ற திருமணமான 35 வயது பெண் நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.

அவரை உடனே மருத்துவமனைக்கு போலீஸ் சென்று அனுமதித்துள்ளனர். கவுசல்யா தனது புகாரில், ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் ஒரு வருடம் முன் மோவ் [Mhow] பகுதியில் பணியில் இருந்தபோது கேன்டீன் அட்டை தந்து உதவியபோது அவரை நான் அறிவேன். அவர் அசாமுக்கு மாற்றலான பின் தற்போது தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சஞ்சய், அந்தரங்க வீடியோ ஒன்றை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

அங்கு அறையில் வைத்து என்னை பாலியல் தொல்லை செய்த அவர் எனது அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை நுழைக்க முயன்றார். அங்கிருந்து தப்பித்து தான் வந்ததாக தெரிவித்திருந்தார். கவுசல்யாவின் புகாரை அடுத்து ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com