பஞ்சாப் மாநிலத்தில் அடர் பனி - தீ மூட்டி குளிர் காய்ந்த மக்கள்

பஞ்சாப் மாநிலத்தில் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு குறைந்து காணப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனி மூட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனி மூட்டம்
Published on

அமிர்தசரஸ்:

வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் காலம் நிலவி வருகிறது.  அதிகாலையில் எதிரே வருபவர் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை போட்டுக் கொண்டு செல்கின்றன. 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே தட்பவெட்ப நிலை காணப்படுகிறது.   

இன்று ஒரு  டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு வெப்ப நிலை குறைந்து காணப்படுவதுடன், அடர்ந்த பனிமூட்டமூம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் வீடுகள் மற்றும் தங்கும் பகுதிகளுக்கு முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com