'அமேசான் இந்தியா' விளம்பரத்தில் விஞ்ஞானி ஆரியபட்டா அவமதிப்பு

விளம்பரத்தை அமேசான் உடனடியாக திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியர்கள் கண்டனம்.
Amazon India Ad
Published on

உலகிற்கு பூஜ்ஜியத்தை ("0") அறிமுகம் செய்த மாபெரும் இந்திய கணிதவியலாளரும் வானியலாளருமானவர் ஆரியபட்டர்.

அவரது உருவத்தை வைத்து சேவைகள் தொடர்பான வணிக ரீதியான விளம்பரம் ஒன்றை 'அமேசான் இந்தியா' நிறுவனம்  வெளியிட்டது.

'அமேசான் நவ்' என்ற பெயரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தில், அவமரியாதையான கோமாளித்தன வசனங்களை கொண்டு ஆரியபட்டர் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மலிவான வணிக லாபத்திற்காக இந்திய கலாச்சாரம், வரலாறு மற்றும் மாபெரும் அறிஞர்களை இந்த விளம்பரம் அற்பமாக சித்தரிக்கிறது.

ஆகவே இந்த விளம்பரத்தை அமேசான் உடனடியாக திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com