கனமழை எதிரொலி: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது.அமர்நாத் பனிலிங்கத்தை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்
கனமழை எதிரொலி: அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
Published on

ஸ்ரீநகர்:

அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 29-ம் தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாத யாத்திரை செல்கிறார்கள்.

வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com