தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.அஜித் தோவல் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019-ம் ஆண்டிலும் அவர் இப்பதவிக்கு நியனம் செய்யப்பட்டார். அவருக்கு மத்திய இணை மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு 3-வது தடவையாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார்.

அஜித் தோவல் 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நீடிப்பார். அவரது பதவிக்காலம் பிரதமரின் பதவிக் காலத்துடன் இணைந்ததாக இருக்கும்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய காலத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக டோக்லாமில் நடந்த நேருக்குநேர் மோதல் சம்பவம், பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் அவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றது.

1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்திச்சென்ற பயங்கரவாதிகளுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கியமான அதிகாரியாக அஜித் தோவல் திகழ்ந்தார். இவர் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com