ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம் - போதைப்பொருள் பயன்படுத்தினாரா விமானி? - சோதனையில் ஷாக்

விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா?
ஏர் இந்தியா
ஏர் இந்தியா
Published on: 

ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், வந்துகொண்டிருந்தபோது நடுவானில் திடீரென டர்புலன்ஸ் காரணமாக சுமார் 300 அடி கீழே இறங்கியது.

காயம்

விமானம் குலுங்கியதில் அதிலிருந்த 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலின்படி, 13 பயணிகள் மற்றும் 4 கேபின் க்ரூ உறுப்பினர்கள் உட்பட 17 பேர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்பட்டனர். சீட் பெல்ட் அணியாததே அவர்களுக்கு காயம் ஏற்பட காரணம்.

டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிறகு, விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பிரீத் அனலைசர் பரிசோதனையில் மது அருந்தவில்லை என முடிவு வந்தது.

போதைப்பொருள் பரிசோதனை

இருப்பினும் சந்தேகம் தீராத நிலையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு 'சைக்கோஆக்டிவ் சப்ஸ்டன்ஸ்' எனும் போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில் விமானத்தை ஓட்டிய 30 வயதுடைய கேப்டனுக்கு நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் Confirmatory Test எனும் இறுதி பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே கேப்டன் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.

விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏர் இந்தியா விளக்கம்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "விமானிகளுக்கு வழக்கமான போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது உண்மைதான்.

ஆனால், அந்தப் பரிசோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் ஏர் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. எனவே, இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com