பாகிஸ்தான் வான் பகுதிக்குள் நுழைந்த ஏர் இந்தியா: அதிகாரிகள் விசாரணை

டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் சென்ற ஏர் இந்தியா கொஞ்ச நேரம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறந்ததால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா
Published on

ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு இந்திய வான் பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தடைவிதித்துள்ளது.

நேற்று முன்தினம் (22-ந்தேதி) டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ்க்கு ஏர் இந்தியாவின் AI479 விமானம் சென்றது. அமிர்தரஸ் விமான நிலையம் சென்ற நிலையில், தரையிறங்குவதற்கு முன்னதாக, வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. திடீரென் சில வினாடிகள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் சென்றுள்ளது. இது குறித்து ஒழுங்குமுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர் இந்தியா, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பாதுகாப்புக்கு டாப் முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது. ஒருவேளை தங்கள் நாட்டு வான் எல்லையில் தடையை மீறி பறந்ததால், நடவடிக்கை எடுத்திருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். இதனால்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com