ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல்: திருச்சூரில் 310 பன்றிகள் அழிப்பு

திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல்:  திருச்சூரில் 310 பன்றிகள் அழிப்பு
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் நோய் பரவல் மேலும் அதிகரித்திருக்கிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அது மட்டுமின்றி பறவை காய்ச்சலும் கேரளாவில் பரவியது. இதன்காரணமாக ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள், கோழிகள் மற்றும் பறவைகள் கொல்லப்பட்டன. இந்நிலையில் திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.

மடக்கத்தனம் பகுதியில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. இதனால் அங்கு மாநில கால்நடைத்துறை முகாமிட்டு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்று பாதிப்பு உள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக உருவாக்கப்பட்ட மீட்பு குழுவினர் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. மடக்கத்தனம் பகுதியில் இதுவரை 310 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு எங்கும் இருக்கிறதா? என்று கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com