

அதானி துறைமுகம் மற்றும் SEZ நிறுவனம், அர்ஜென்டினாவின் மெரிடியன் குழுமத்துடன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி திட்டத்திற்கான 10 ஆண்டு கால ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்த திட்டத்திற்கான முதல் ஆரம்ப கட்டம், செப்டம்பர் 2027-இல் தொடங்கி, ஆண்டுக்கு 2.45 மில்லியன் டன் LNG உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உபயோகப்படுத்துதன் மூலம், கனரக வாகனங்களில் டீசல் என்ஜின்களின் நீண்ட தூர இயக்க வரம்பிற்கு இணையான மைலேஜ் கிடைக்கிறது.
மேலும் நச்சுத் தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றத்தை 80 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை குறைத்து, புகைமூட்டத்தை கணிசமாக கட்டுப்படுத்துகிறது.
தற்போது அதிகரித்து வரும் டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிவாயுக்களின் தட்டுப்பாட்டால், அதானி நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து APSEZ தலைமை செயல் அதிகாரி அஷ்வினி குப்தா கூறுகையில், “பல்வேறு புவியியல் பகுதிகளில் பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் எங்களின் வளர்ந்து வரும் திறனை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது.
12 நாடுகளில் கடல்சார் செயல்பாடுகள் மற்றும் துறைமுகங்கள், LNG முனையங்கள், தேசிய எண்ணெய் நிறுவனங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கடலோர வசதிகளுக்கு ஆதரவளிக்கும் வளர்ந்து வரும் கடல்சார் சொத்துக்களின் தொகுப்புடன், சிக்கலான கடல்சார் சூழல்களுக்கு நாங்கள் ஆழ்ந்த செயல்பாட்டு நிபுணத்துவத்தைக் கொண்டு வருகிறோம்.
புதிய எரிசக்தி வர்த்தக வழித்தடங்களைச் சாத்தியமாக்கி, நீண்டகால விநியோக மீள்திறனை வலுப்படுத்தும் நம்பகமான கடல்சார் சூழல் அமைப்புகளை உருவாக்க நாங்கள் உதவுகிறோம்” என்று கூறினார்.