அயோத்தி ராமஜென்ம பூமியில் சாமிதரிசனம் செய்தார் பிரியங்கா சோப்ரா

அயோத்தியில் ராமர் கோவிலில் கடந்த ஜனவரியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமஜென்ம பூமியில் சாமிதரிசனம் செய்தார் பிரியங்கா சோப்ரா
Published on

லக்னோ:

அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து, அயோத்தி நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு அரசியல் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் தனது குழந்தையுடன் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு இன்று சென்றார். அங்கு பால ராமரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

இதுதொடர்பான புகைப்படங்களை கோவில் பூசாரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com