என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
படுத்த படுக்கையாக இருந்த தந்தையை தவிக்க விட்டுச்சென்ற டிரைவர் கைது
- தந்தை சண்முகனை உடன் அழைத்துச் செல்லாமல் வாடகை வீட்டிலேயே கைவிட்டு சென்றார்.
- படுத்த படுக்கையாக இருந்த தந்தையை கைவிட்டு சென்ற அஜித் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள ஈரூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்(வயது 38). இவர் அந்த பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அஜித்தின் வீட்டில் அவரது தந்தை சண்முகனும் வசித்து வந்தார். உடல் நலம் பாதித்து படுத்த படுக்கையாக இருந்த அவரை வெகு நாட்களாக அஜித் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென வாடகை வீட்டை காலி செய்துவிட்டு சென்றனர். அவர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். ஆனால் தந்தை சண்முகனை உடன் அழைத்துச் செல்லாமல் வாடகை வீட்டிலேயே கைவிட்டு சென்றார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் சண்முகனுக்கு உணவு கொடுத்து உதவி செய்தனர். அவர் படுத்த படுக்கையாக இருந்ததால் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. ஆகவே அவரது நிலை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு பணியாளர்கள் அங்கு சென்றனர்.
வாடகை வீட்டில் தனியாக தவித்தபடி இருந்த சண்முகனை சிகிச்சைக்காக தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சண்முகனை அவரது மகன் அஜித் தவிக்க விட்டுச்சென்ற தகவல், அவரது மகள்களுக்கு தெரியவந்தது.
அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த சண்முகனை, அவரது விருப்பப்படி கொத்தமங்கலத்தில் உள்ள அவரது அண்ணனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். படுத்த படுக்கையாக இருந்த தந்தையை கைவிட்டு சென்ற அஜித் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் அஜித் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அஜித் சுற்றுலா பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கர்நாடகாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்