நாங்கள் டெல்லி மக்களுக்கு பணியாற்றியுள்ளோம்: அவர்கள் கொள்ளையடித்தவர்கள்- மணிஷ் சிசோடியா தாக்கு

நாங்கள் டெல்லி மக்களுக்கு மருத்துவம், கல்வி மற்றும் பல வசதிகளை வழங்கியுள்ளோம்.சமாஜ்வாடி கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது.
நாங்கள் டெல்லி மக்களுக்கு பணியாற்றியுள்ளோம்: அவர்கள் கொள்ளையடித்தவர்கள்- மணிஷ் சிசோடியா தாக்கு
Published on

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள.

இந்த நிலையில் ஜங்புரா தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும், டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா கூறுகையில் "ஆம் ஆத்மி டெல்லி மக்களுக்கான பணியாற்றியுள்ளது. ஆனால் மறுபக்கம் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) டெல்லி மக்களை கொள்ளையடித்தவர்கள்.

நாங்கள் டெல்லி மக்களுக்கு மருத்துவம், கல்வி மற்றும் பல வசதிகளை வழங்கியுள்ளோம். சமாஜ்வாடி கட்சி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அகிலேஷ் யாதவ் பேரணியில் ஈடுபட்டு வருகிறார்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com