போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போது காய்கறி உறித்த பெண்

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போது காய்கறி உறித்த பெண்
Published on

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது. குறிப்பாக 'பீக்அவர்ஸ்' நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகனம் சிக்கும் போது அதில் இருக்கும் பயணிகள் அலுவல் வேலைகளை செய்வது போன்ற காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.

இந்நிலையில் தற்போதும் அதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் நேரத்தை வீண் செய்யக்கூடாது என திட்டமிட்டு 3 கவர்களில் வைத்திருந்த காய்கறிகளை உறிக்க தொடங்கி உள்ளார். மேலும் அதனை புகைப்படமாக எடுத்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார். அவரது இந்த படம் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com