ஆந்திரா போலீஸ் நிலையத்தில் வாலிபரின் காது, மூக்கில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை

குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
ஆந்திரா போலீஸ் நிலையத்தில் வாலிபரின் காது, மூக்கில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், தாடி பத்திரி, சி.பி.ஐ காலனியை சேர்ந்தவர் ராம குறவைய்யா. கடந்த மாதம் 25-ந் தேதி ராம குறவைய்யாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் காயம் அடைந்த நண்பர் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமீத்கான் வழக்கு பதிவு செய்து குறவைய்யாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தார். இதில் குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குறவைய்யா அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜனிடம் புகார் செய்தார். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் இன்ஸ்பெக்டர் அமித்கான் என்பவர் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பு ராஜன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com