வாலிபர் வயிற்றில் ஒரு அடி நீள சுரைக்காய்: ஆபரேசன் மூலம் நீக்கம்

வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது.
வாலிபர் வயிற்றில் ஒரு அடி நீள சுரைக்காய்: ஆபரேசன் மூலம் நீக்கம்
Published on

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வீட்டில் அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

உடனடியாக அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வாலிபரின் வயிற்றில் எக்ஸ்ரே செய்தனர். அப்போது வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவருக்கு ஆபரேஷன் செய்தனர். அப்போது அவருடைய வயிற்றில் ஒரு அடி நீளத்திற்கு சுரைக்காய் இருந்தது தெரிய வந்தது. அதனை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். மேலும் சுரைக்காய் வயிற்றில் இருந்ததால் வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாலிபரின் ஆசனவாய் வழியாக அவருடைய உடலுக்குள் சுரைக்காய் செலுத்தப்பட்டுள்ளது. வாலிபர் சுயநினைவு இல்லாமல் தற்போது உள்ளார்.

அவருடைய வயிற்றில் யாராவது வலுக்கட்டாயமாக சுரைக்காய் செருகினார்களா?. அல்லது அவரே வைத்தாரா என்பது தெரியவில்லை.

வாலிபருக்கு சுயநினைவு வந்தால் மட்டுமே இது குறித்து தகவல் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com